திமுக நிர்வாகிகளிடையே கடும் வாக்குவாதம் மோதல்

X
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில் திமுக பேரூர் கழகம் சார்பாக அமைச்சர் ஐ. பெரியசாமி 10 பேர் கொண்ட பொறுப்பு குழுவை நியமித்திருந்தார். இவர்கள் யாரையும் ஒன்றிய செயலாளர், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக கட்சியினரோ தொடர்பு கொண்டு தங்களை முறையாக அழைப்பதில்லை எனக் கூறி இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் அரசின் திட்ட முகாமில் நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முகாமில் கலந்து கொள்ள வந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சடைந்தனர். இதனால் தங்கள் குறைகளை கூற வந்த பொதுமக்கள மனுக்களை வழங்க முடியாமல் அலைக்கழிக்கப்பட்டனர். திமுக ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் நடராஜன் முன்னிலையில் திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட இந்த கடுமையான வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முகாமில் பங்கேற்க வந்த பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். பொதுமக்களின் மனுக்களை பரிசீலித்து தீர்வு காண்பதில் தொய்வு ஏற்பட்டது. பணிகள் பாதிப்படைந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
Next Story

