தமிழர் தேசம் கட்சி ஆலோசனை கூட்டம்

X
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள அம்மா திருமண மண்டப வளாகத்தில் தமிழர்தேசம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நிறுவன தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில மாணவரணி செயலாளர் பூமி அம்பலம், மாவட்ட செயலாளர்கள் பிரபுஅம்பலம், ஆண்டிஅம்பலம், விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரியில் திருச்சியில் நடைபெற உள்ள முத்தரையர் அரசியல் அதிகாரம் மீட்பு மாநாடு குறித்து மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளிடையே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாநில மருத்துவர் அணி செயலாளர் அன்புஎழில், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சேகர் உள்ளிட்ட தமிழர் தேசம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

