வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி வளாக பகுதிகளில்
நாகை மாவட்டம் கீழையூர் வட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட வேளாங்கண்ணி மற்றும் செருதூர் ஆகிய பகுதிகளில், நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அறிவுறுத்தலின் பேரிலும், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப். வி.கிருஷ்ண குமாரின் அறிவுரையின் பேரிலும், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அலுவலர் மருத்துவர் வினோத் கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் விஜயகுமார் ஆகியோரின் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சு.மோகன், வேளாங்கண்ணி காவல் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ், காவலர் விமல், சுகாதார ஆய்வாளர்கள் குணசீலன், கெளதம் ஆகியோர் கொண்ட குழு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பள்ளி வளாகப் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். மேலும், புகையிலை தடுப்பு விளம்பர பலகை வைக்கப்படாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் நடந்து வருவது குறித்து கல்வி நிறுவனங்களுக்கும், வணிக வளாக உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Next Story



