இறால் பண்ணையில் ஏரோட்டரில் சிக்கி இடது காலை இழந்தவருக்கு
நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு ஊராட்சி தெற்கு சல்லிக்கும் பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இறால் பண்ணையில் வேலை செய்யும்போது, ஏரோட்டரில் சிக்கி நீலமேகத்தின் இடது கால் முற்றிலும் துண்டானது. படுகாயத்தால் கதறிய நீலமேகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நீலமேகம் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த, கிழக்கு ஒன்றிய செயலாளரும் வேளாங்கண்ணி சிறப்புநிலை பேரூராட்சி துணைத்தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி, ஒன்றிய திமுகவின் சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கினார். அப்போது, வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய. சார்லஸ், சுற்றுச்சூழல் அணி அன்புமணி, இளை செயலாளர்கள் கோபி, நாகையன், சக்கரபாணி, ராசாங்கம், கண்ணையன், காளிமுத்து, சாம்பசிவம், கவுன்சிலர் வெற்றிவேல், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஓ.எஸ்.மணியன், ஒன்றிய பிரதிபதி காத்தையன், ஒன்றிய விளையாட்டு அணி மதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story



