கோவை: கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆசாமி கைது !

X
டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த சித்திரவேல் (32) என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கோவையில் மடக்கிப் பிடித்து நேற்று கைது செய்தனர். டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு வந்த புகாரின் பேரில், அவர்கள் கோவைக்கு வந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் சித்திரவேல் தங்கி இருந்த வீட்டில் இரவு சோதனை நடத்தினர். அப்போது பல போலி அடையாள அட்டைகள் மற்றும் சி.பி.ஐ. அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட சித்திரவேல் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். பின்னர் கோர்ட்டு அனுமதி பெறப்பட்டதும் அவரை டெல்லி கொண்டு செல்ல சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த கைது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

