பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு !

X
கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின், “அரசின் அல்லது காவல்துறையின் மீது தவறு இல்லை” என கூறியதை அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். அவர் தெரிவித்ததாவது: ஏ.டி.ஜி.பி டேவிட்சன் அளித்த தகவலிலும், சி.பி.ஐ க்கு வழங்கப்பட்ட காவல்துறை அறிக்கையிலும் முரண்பாடுகள் உள்ளன. காவல் துறையினர் சம்பவ இடத்தில் இருந்த எண்ணிக்கை கூட சரியாக கூறப்படவில்லை. முதல்வர் உண்மையை மறைக்காமல் சி.பி.ஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். போஸ்ட் மார்டம் நடைபெற்ற நேரம், டேபிள் எண்ணிக்கை போன்ற விபரங்கள் கூட பொருந்தவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், முதலமைச்சர் கூறிய தகவல்களில் முரண்பாடு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். முதல்வர் மற்றும் துணை முதல்வர் துபாய் பயணத்திற்காக அவசரமாக பிரேத பரிசோதனை முடித்துவிட்டனர். இதை சி.பி.ஐ சரியாக விசாரிக்கும், என அண்ணாமலை கூறினார். வி.சி.க.வின் மிரட்டல்களுக்கு தாம் அஞ்ச மாட்டேன் என்றும், அந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். “கரூர் விவகாரத்தை மறைக்க இந்தி எதிர்ப்பு மசோதா கையாளப்படுகிறது. முதல்வருக்கு ஆங்கிலம் தெரியாது; பாக்ஸ்கான் நிறுவனத்தாருக்கு தமிழ் தெரியாது. பாக்ஸ்கான் உண்மையை வெளிக்காட்டியதும் அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. 15 பில்லியன் டாலர் முதலீட்டை ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு பெற்றுள்ளார்; ஆனால் டி.ஆர்.பி. ராஜா முதல்வரை ஏமாற்றுகிறார். இதுவே அவர்களின் ‘திராவிட மாடல்’,” என அண்ணாமலை சாடினார்.
Next Story

