கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: சூலூர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை !

X
கோவை மாவட்டம் சூலூரில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளி அரவிந்த் குமாருக்கு கோவை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. முருகன் என்ற முருகேசன் என்பவரை கொலை செய்த வழக்கில், சூலூரைச் சேர்ந்த அரவிந்த் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை முடிவில் நீதிமன்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்மானித்தது. இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அதிகாரிகளையும், சாட்சிகளை திறம்பட ஆஜர்படுத்திய காவல்துறையினரையும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
Next Story

