இல்லம் தேடி கல்வி. ஒரு நாள் பயிற்சி முகாம்

X
மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கொட்டாம்பட்டி வட்டார வள மையத்தில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி ரேணுகா வழிகாட்டுதலின்படி இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நேற்று (15.10.25) நடைபெற்றது. பயிற்சியில் வட்டார வள மேற்பார்வையாளர் ரவிகணேஷ் அவர்கள் துவக்கி வைத்து தன்னார்வலர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும் முறையினை விரிவாக எடுத்துக் கூறினார் அதனை தொடர்ந்து ஆசிரியர் பயிற்றுநர் முத்துச்சாமி பயிற்சி வழங்கினார் தன்னார்வலர்களுக்கு 100% வருகை பதிவு செய்ததற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் பரிசு பொருட்களை வழங்கி பாராட்ட தெரிவித்தார் வட்டார ஒருங்கிணைப்பாளர் நாகரெத்னா நன்றி கூறினார்
Next Story

