திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பகுதியில் சிறுபான்மை இன முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான மயானம் ஆக்கிரமிப்பு அங்கிருந்த வீடுகள் இடிப்பு
Tiruchengode King 24x7 |16 Oct 2025 7:24 PM ISTதிருச்செங்கோடு அருகே சிறுபான்மையினருக்கு சொந்தமான மயானத்தை ஆக்கிரமிப்பு செய்து ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி வீடுகளை இடித்து தரைமட்டம் செய்து வேலி அமைத்து அராஜகம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் உஞ்சனை கிராமம் சர்வே எண் 107/2 சுமார் 92 சென்ட் நிலம் உள்ளது. 1965 ஆண்டு முதல் சிறுபான்மை முஸ்லீம் மக்கள் குடியிருந்து வந்தனர் இந்நிலையில் இதில் உள்ள ஒரு சிலரை பயன்படுத்தி ஸ்ரீ ஸ்ரீதரமூர்த்தி என்பவர் தவறான ஆவணங்களை வைத்து கிரயம் செய்திருந்தார் இதனைத் தொடர்ந்து இந்த நிலத்தை ரியல் எஸ்டேட்டுக்கு பயன்படுத்துவதற்காக திருச்செங்கோட்டை சேர்ந்த ஜாகீர் மற்றும் சுல்தான் ஆகியவர்கள் நிலத்தில் குடியிருக்கும் பாபு(64)தந்தை பெயர் அஜிஸ் சாய்பு என்ற கூலித் தொழிலாளியை கடந்த 28ஆம் தேதி அன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் வருவாய் துறை மாவட்ட ஆட்சியர் என பல்வேறு துறைகளுக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் வெளியூர் சென்ற நேரத்தில் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி வீடுகளை இடித்து அதில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்து இந்நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்துள்ளனர். இது குறித்து திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் புகார் மனு பாதிக்கப்பட்ட பாபு என்பவர் கொடுத்தார் தற்போது வரை விசாரிக்காமல் இதற்கான சிஎஸ்ஆர் ரசீது கூட வழங்காமல் இன்று நாளை என காவல் நிலையத்திற்கு வரவழைத்து அலைக்கழித்து வருகின்றனர். மேலும் பாபு என்பவர் பெயரில் மின்சார இணைப்பு மற்றும் வீட்டு வரி ரசீது உட்பட கடந்த 30 வருடங்களாக அவர் பெயரில் உள்ளது. முஸ்லிம் சமூகம் மக்கள் யாரேனும் இறப்பு ஏற்பட்டால் இவ்விடத்தில் அடக்கம் செய்து வருடா வருடம் வழிபடுவது வழக்கம் மேலும் சந்தனக்கூடு திருவிழாவும் இவ்விடத்திலிருந்து தான் துவங்கும். மேலும் ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதற்கு வருவாய்த்துறை அதிகாரிகளும் துணையாக செயல்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் வரும் 22 ஆம் தேதிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உஞ்சனை பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story


