ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் கடை டெண்டரை முறைகேடாக நடைபெற்றதாகவும் அதனை,ரத்து செய்யக்கோரி விநோதமான முறையில் மாரியம்மனிடம் மனு கொடுத்த அதிமுகவினர்: இந்த

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் கடை டெண்டரை முறைகேடாக நடைபெற்றதாகவும் அதனை,ரத்து செய்யக்கோரி விநோதமான முறையில் மாரியம்மனிடம் மனு கொடுத்த அதிமுகவினர்: இந்த
X
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் கடை டெண்டரை முறைகேடாக நடைபெற்றதாகவும் அதனை,ரத்து செய்யக்கோரி விநோதமான முறையில் மாரியம்மனிடம் மனு கொடுத்த அதிமுகவினர்:
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் கடை டெண்டரை முறைகேடாக நடைபெற்றதாகவும் அதனை,ரத்து செய்யக்கோரி விநோதமான முறையில் மாரியம்மனிடம் மனு கொடுத்த அதிமுகவினர்: அரசியல் தலையீடு இல்லாமல் 40 ஆண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள டெண்டரை பின்பற்றக்கோரி அதிமுக ராசிபுரம் நகர செயலாளர் பேட்டி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஐப்பசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம், திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் ஏராளமான கடைகள் அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கான டெண்டர் நேற்று முன்தினம் விடப்பட்டது ஆனால் டெண்டர் முறைகேடாக நடைபெற்றதாகும் அதனை ரத்து செய்யக் கோரி அதிமுகவினர் மனு அளித்தனர்.இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகாலமாக எந்த விதமான அரசியல் தலையீடும் இல்லாமல் டெண்டர் விடப்பட்டது. ஆனால், தற்போது அரசியல் தலையீடு உள்ளது. ராசிபுரம் திமுக நகர செயலாளர் என் ஆர் சங்கர் பினாமி பெயரில் டெண்டர் எடுத்துள்ளனர். எனவே, டெண்டரை ரத்து வேண்டும் எனக்கோரி, நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் செயல் அலுவலரை சந்தித்து, ராசிபுரம் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் கட்சியினர் சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து வினோதமான முறையில் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு மனுவை அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து அம்மனை தரிசனம் செய்தனர்...
Next Story