சின்னதாராபுரம் அருகே நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது வேகமாக வந்த கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு.
சின்னதாராபுரம் அருகே நின்று கொண்டிருந்த மூதாட்டி மீது வேகமாக வந்த கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா சின்ன தாராபுரம் செட்டியார் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் மனைவி அருக்காணி வயது 85. இவர் புதன்கிழமை அன்று மதியம் 12.30 மணி அளவில் சின்னதாராபுரம் தேர்முட்டி அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது ராஜஸ்தான் மாநிலம் சர்தார் பகுதியைச் சேர்ந்த படாரம் என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் நின்று கொண்டு இருந்த அருக்காணி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலை மற்றும் வலது கை இடது காலில் பலத்த காயமடைந்த அருக்காணியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த அருக்காணியின் மகன் சுப்பிரமணி வயது 62 என்பவர் அளித்த புகாரில் சின்ன தாராபுரம் காவல் துறையினர் காரை வேகமாகவும் அஜாக்கிரதையாக வும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய படாரம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





