கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.
கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற மூதாட்டி மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் வெள்ளியணை வடபாகம் அருகே செல்லாண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சமுத்து மனைவி முனியம்மாள் வயது 60. இவர் செவ்வாய்க்கிழமை அன்று இரவு 7:15 மணி அளவில் கரூர் - வாங்கல் செல்லும் சாலையில் தனியார் ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் கரூர் கந்த பொடிக்கார தெருவை சேர்ந்த ஷாஜகான் வயது 37 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்று கொண்டிருந்த முனியம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முனியம்மாளை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக முனியம்மாள் அளித்த புகாரில் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஷாஜகான் மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





