சிறந்த பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

X
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (16.10.2025) நடைபெற்ற சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப. அவர்கள் தலைமையிலான பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் மாவட்ட சுகாதார நலச்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், தேசிய அளவில் சிறந்த செயல்திறன் காட்டி தரவரிசை சான்றிதழ் பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள் (ASHA workers) கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். சுகாதார சேவைகள் மக்களிடம் சிறப்பாகச் சென்றடைய தன்னார்வலர்களின் பணி முக்கியமானது என்பதை ஆட்சித்தலைவர் வலியுறுத்தி, தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுமாறு அவர்களை உற்சாகப்படுத்தினார். நிகழ்வில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Next Story

