ஜெயங்கொண்டத்தில் பணம் நகை இல்லாததால் ஒரு கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு :

X
ஜெயங்கொண்டம், அக்.17- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் உள்ள கம்பர் தெருவில் கார்த்திகேயன் தனம் தம்பதியினர் வாசித்து வந்தனர்.இந்நிலையில் கார்த்திகேயன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி தனம் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்று தங்கியிருந்துள்ளார்.. இந்நிலையில் நேற்று அதிகாலையில் தனம் என்பவர் வீட்டின் பின்புறம் பக்கத்து தெருவில் வசிக்கும் அவரது உறவினர் ஒருவர் அதிகாலை 4 மணி அளவில் வேலைக்கு புறப்பட்டு உள்ளார் அப்போது தனம் வீட்டில் விளக்கு எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மேட்டு உரிமையாளர் தனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர் ஒருவரிடம் வீட்டு சாவியை வாங்கி கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்த நிலையில் மர்ம நபர்கள் உள்ளே சென்று அனைத்து ரூம்களிலும் உள்ள பீரோக்களை உடைத்தும பணம் நகை இருக்கிறதா? என தேடிப் பார்த்துள்ளனர். அப்போது பணம் மற்றும் நகைகள் ஏதும் இல்லாததால் சாமி ரூமில் இருந்த சுமார் 1 கிலோ மதிப்புள்ள இரண்டு வெள்ளி குத்துவிளக்குகள், டம்ளர் உள்ளிட்ட வெள்ளி பொருட்களை மட்டும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் தெருக்களிலும், முக்கிய இடங்களிலும் மற்றும் வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தியும் பலரும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாமல்விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைத்து செல்கின்றனர். இதனால் திருடர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெருவில் உள்ள வீட்டு உரிமையாளர்களிடம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தியும், விலை உயர்ந்த பொருட்களை வங்கி லாக்கரில் வைக்கவும் அறிவுறுத்தினர். மேலும். கண்காணிப்பு கேமரா இருந்திருந்தால் உடனடியாக திருடர்களை எளிதில் கைது செய்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்ய வசதியாக இருக்கும் எனவும் தெரிவித்து சென்றனர்.
Next Story

