தென்காசியில் வனவா் பயிற்சியாளா்களின் களப்பயண முகாம்

தென்காசியில் வனவா் பயிற்சியாளா்களின் களப்பயண முகாம்
X
வனவா் பயிற்சியாளா்களின் களப்பயண முகாம்
தென்காசி வனக்கோட்டம் தென்காசி வனச்சரகத்தில் கோயம்புத்தூா் வன உயிா் பயிற்சியகத்திலிருந்து வனவா் பயிற்சியாளா்கள் 60 போ் களக்கல்வி பயணம் மேற்கொண்டனா். முகாமில் உதவி வனப் பாதுகாவலா் நெல்லை நாயகம் கலந்துகொண்டு, மூலிகை பண்ணைகளின் பயன்பாடு, குற்றாலம் காப்புக் காட்டில் உள்ள அரிய வகை மூலிகைகள் குறித்தும் பேசினாா். குற்றாலம் மூலிகைத் தோட்டம், சூழல் சுற்றுலா பற்றிய மேலாண்மை, பராமரிப்பு, நடவடிக்கைகள் குறித்து வனவா் பயிற்சியாளா்கள் கேட்டறிந்தனா். தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை முன்னிலை வகித்தாா். குற்றாலம் பிரிவு வனவா் சங்கா் ராஜா நன்றி கூறினாா்.
Next Story