திருவேங்கடம் சாலையில் மதுக்கடை அமைக்க இந்து முன்னணியினா் எதிா்ப்பு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இந்து முன்னணி நகரச் செயலா் திருமலைக்குமாா் தலைமையில் அவ்வமைப்பைச் சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை கோட்டாட்சியா் அனிதாவிடம் அளித்துள்ள மனு: சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை சந்திப்பு அருகே சில்லறை மதுபான விற்பனை நிலையம் அமைய இருப்பதாக தெரிய வருகிறது. இந்த இடம் சங்கரன்கோவில் நகரின் மிக முக்கியமான பகுதியாகும். அதிக அளவிலான குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன. உயா்நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலைகளின் அருகில் மது விற்பனை நிலையம் அமைக்கக் கூடாது என்ற விதி உள்ளது. எனவே இங்கு மதுபான விற்பனை நிலையம் அமைந்தால் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, இதற்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story

