கோவை: கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் !

X
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஐந்தாவது முறையாக இமெயில் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக கடந்த மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் நான்கு முறை இமெயில் மிரட்டல்கள் வந்த நிலையில், நேற்று இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் காவல்துறை, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் குழு, மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சந்தேகப்படும் பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சைபர் கிரைம் பிரிவு மிரட்டல் அனுப்பிய நபரை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Next Story

