கோவை: இண்டிகோ விமான சேவை டிசம்பர் முதல் ரத்து !

X
கோவை – சிங்கப்பூர் இடையே இயங்கிவந்த இண்டிகோ விமான சேவை வரும் டிசம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது. இண்டிகோ நிறுவனம் கடந்த 2024 அக்டோபரில் இந்த சேவையை தொடங்கியிருந்தது. வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்ட இந்த விமானம், கோவையில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு வந்தது. ஆனால், பயணிகள் வரவேற்பு குறைவாக இருந்ததால் சேவை நிறுத்தப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம், கோவை – சிங்கப்பூர் விமான சேவை குளிர்கால அட்டவணையில் இடம்பெறாது. அதற்குப் பதிலாக, அந்த விமானம் விஜயவாடா – சிங்கப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story

