வங்கிகளில் ஒரே நாளில் பணம் எடுக்கும் முறையில் குளறுபடி தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் அவதி உடனடியாக சரி செய்ய மத்திய நிதித்துறை அமைச்சரிடம் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கோரிக்கை.

X
Namakkal King 24x7 |17 Oct 2025 11:57 AM ISTகணினி மென்பொருளை முறையாக அப்டேட் செய்த பிறகு இந்த திட்டத்தை அறிவித்திருந்தால் வியாபாரிகள் பொதுமக்களுக்கு இந்த சிரமம் இருந்திருக்காது தற்போது ஏற்பட்டுள்ள இந்த சிரமத்தை போக்கும் வகையில் உடனடியாக இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகளின்படி, அக்டோபர் 4, 2025 முதல் காசோலைகள் ஒரே நாளில் பணம் பெறும் வகையில் கிளியர் செய்யப்படும். புதிய முறைப்படி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காசோலைகள் தொடர்ச்சியாக கிளியரிங் செய்யப்படும், மேலும் மாலை 4 மணிக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட காசோலைகள் அடுத்த வேலை நாளில் செயல்படுத்தப்படும். ஜனவரி 2026 முதல், காசோலைகள் டெபாசிட் செய்யப்பட்ட 3 மணி நேரத்திற்குள் கிளியர் செய்யப்படும். புதிய விதிமுறைகளின்படி காசோலை கிளியரிங் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நேரத்தில் டெபாசிட் செய்யப்படும். காசோலைகள் தொடர்ச்சியாக கிளியரிங் செய்யப்படும்.காசோலைகள் வெற்றிகரமாக கிளியர் ஆனால், பணம் அன்றே வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். மாலை 4 மணிக்கு பிறகு டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் அடுத்த வேலை நாளில் கிளியரிங் செய்யப்படும்.மேற்கண்ட ஒரே நாளில் பணம் எடுக்கும் முறையை அமலுக்கு கொண்டு வந்த நிலையில்.அதனை செயல்படுத்த வங்கிகள் பயன்படுத்தும் கணினி மென்பொருளில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் தரப்படும் காசோலைகளுக்கு பணம் கிடைக்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது இதனால் தீபாவளி வரவுள்ள காலகட்டத்தில் வியாபாரிகள் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கணினி மென்பொருளை முறையாக அப்டேட் செய்த பிறகு இந்த திட்டத்தை அறிவித்திருந்தால் வியாபாரிகள் பொதுமக்களுக்கு இந்த சிரமம் இருந்திருக்காது தற்போது ஏற்பட்டுள்ள இந்த சிரமத்தை போக்கும் வகையில் உடனடியாக இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மாண்புமிகு மத்திய நிதித்துறை அமைச்சர் தலையிட்டு அதனை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.
Next Story
