கோவை: வெளிநாட்டினர் விவரங்களை போலீசுக்கு தெரிவிக்க உத்தரவு

ஹோட்டல் நிர்வாகத்தாருக்கு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வழங்கிய கோவை போலீஸ் கமிஷனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில், ஹோட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள், மேலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துணை கமிஷனர்கள் கார்த்திகேயன், திவ்யா, அசோக் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, ஹோட்டல்களில் தங்கி உள்ளவர்கள், குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டார். இதனை மீறினால் ₹50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும், ஹோட்டல் நிர்வாகத்தாருக்கு செய்த பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
Next Story