எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த முன்னாள் எம்பி
அஇஅதிமுகவின் 54-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மதுரை நீதிமன்றம் அருகில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவச் சிலைக்கு இன்று (அக்.17) மதுரை மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி அதிமுக செயலாளர் கோபாலகிருஷ்ணன், தலைமையிலும் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முருகேசன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள், தொண்டர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story



