கோவை: மூன்றாவது நாளாக நேற்றும் கொட்டி தீர்த்த கனமழை !

X
கோவையில் கடந்த மூன்றாவது நாளாக நேற்று மாலை வேளையில் சிறிது நேரம் கனமழை பெய்தது. காலை நேரத்தில் வெயில் வெப்பமாக இருந்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் நகரம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, தெற்கு கடலோர ஆந்திரா, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு கேரளா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகும். அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், டவுன்ஹால், ஒப்பனக்கார வீதி, சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி, ஜனநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. வெயிலின் வெப்பத்திலிருந்து விடுபட்டு குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story

