கோவை: அருகே ரோலக்ஸ் காட்டு யானை பிடிப்பு !
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மக்களுக்கும், விளை நிலங்களுக்கும் சேதம் விளைவித்த ரோலக்ஸ் என அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானை, இன்று அதிகாலை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் பல மாதங்களாக அச்சுறுத்தி வந்த அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் பலமுறை முயன்றனர். முந்தைய முயற்சியில் மருத்துவரை தாக்கியிருந்த யானையை அடக்குவதற்காக டாப்ஸ்லிப் மற்றும் முதுமலை பகுதிகளில் இருந்து மூன்று கும்கி யானைகள் அழைக்கப்பட்டன. அவற்றின் உதவியுடன் வனத்துறையினர் இன்று அதிகாலை வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்தி ரோலக்ஸ் யானையை பிடித்தனர். இதனால் அந்தப் பகுதிகளில் நீண்டநாட்களாக அச்சத்தில் இருந்த மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
Next Story




