காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
X
ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் சாலை காமாட்சி திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்கு திருட்டு செய்ததை கண்டித்து "இந்திய அரசியலமைப்பை காப்போம், வாக்குத்திருட்டை தடுப்போம்" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சூரஜ் ஹெக்டே வாக்கு திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கான புத்தகத்தை வழங்கினார். முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றும் பொழுது : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் இந்தியா இருக்கும், வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை என்றால் இந்தியா இருக்காது என்று கூறினார்.
Next Story