தமிழக அரசு கண்டித்து பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

X
தூத்துக்குடி: அரசு உதவி பெறும் கலை இலக்கிய கல்லூரிகளை பாதிக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக வரைவு சட்டம் கொண்டு வந்ததை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் அரசு சொத்தை தனியார் சொத்தாக மாற்ற துடிக்கும் அரசை கண்டித்து கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி வாயில் முன்பு வாயில் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளை கல்லூரி ஆசிரியர்களை பாதிக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டத்திலும் தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்திலும் மாற்றத்தை கொண்டு வருவதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கக்கூடிய ஏழை எளிய மாணவர்கள்ளின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் கல்லூரிகள் தனியார் முதலாளிகள் வசமாகும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாசாதாவை கிடப்பில் போட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கல்லூரி பேராசிரியர்களின் மூட்டா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண் பெண் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்
Next Story

