பேரூராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு

பேரூராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு
X
வத்தலக்குண்டு பேரூராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை யொட்டி புத்தாடை இனிப்புகள் வழங்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சி மன்றத் தலைவர் பா.சிதம்பரம் சார்பில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி புத்தாடை இனிப்பு பட்டாசு ஆகிய பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது செயல் அலுவலர் சரவணகுமார் தலைமையில் நடந்த நிகழ்வில் துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார் தலைமை எழுத்தர் முருகேசன் வரவேற்றார் திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் கனகதுரை, பேரூர் செயலாளர் சின்னத்துரை ஆகியோர் பங்கேற்று பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர் 120 பேருக்கு புத்தாடை இனிப்பு பட்டாசு ஆகியவற்றை வழங்கி வாழ்த்துக்களை கூறினர் இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story