கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

X
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த ராமராஜ் (65). இதே ஊரைச் சேர்ந்த செல்வகண்ணன். இருவருக்கும் இடையே கடந்த 16.5.2021ல் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றிரவு புளியம்பட்டி பொது மந்தையில் தூங்கி கொண்டிருந்த செல்வக்கண்ணன் தலையில் ராமராஜ் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தார். இதுகுறித்து குறித்து வழக்கு விசாரணை மதுரை 5வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஜோசப்ஜாய் நேற்று (அக்.16) ராமராஜ் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story

