அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பலி
X
மதுரை கொட்டாம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று உயிரிழந்தது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கல்லங்காடு பகுதியில் உள்ள புள்ளி மான்கள் கருங்காலக்குடி, குன்னங்குடிப்பட்டி பகுதி வரை உணவு, தண்ணீர் தேடி வருவது வழக்கம். இவை அவ்வப்போது 4 வழி சாலைகளை கடக்கும் போது அடிபட்டு பலியாவதும் வாடிக்கையாக உள்ளது. அப்படி வந்த 2 வயதுள்ள ஆண் புள்ளி மான் ஒன்று நேற்று (அக்.16) கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.
Next Story