அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
X
குமாரபாளையத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் மரக்கன்றுகள் நடும் விழா
குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் சிந்தனைப் பேரவை அக்டோபர் 15 அப்துல் கலாம் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக குமாரபாளையம் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி மாணவர்களைக் கொண்டு அத்தி, அரசு, நாவல்,வேம்பு,புங்கன் , பூவரசு மரக்கன்றுகளை நட்டது. நிகழ்விற்கு தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் இரமேஷ் குமார் அவர்கள் வரவேற்புரை செய்து அப்துல்கலாம் பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். வட்டாட்சியர் பிரகாஷ் அவர்கள் தலைமை வகித்தார். தமிழ் சிந்தனைப் பேரவை நிர்வாகிகள் ராஜு, ஆண்டியப்பன், சுந்தர்ராஜ், பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்கள் திருமதி ராணி, ஜாய்ஸ் அருள் செல்வி கலந்து கொண்டனர். சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி நன்றி கூறினார்.
Next Story