ஊத்தங்கரை அருகே கழுத்தில் கயிறு இறுக்கி மாணவன் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு அடுத்த கதவணையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கதிர்வேல் (10). இவர் அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கதிர்வேல் வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் கயிற்றை கட்டி ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவனது கழுத்தில் கயிறு சிக்கி மூச்சுத்திணறி சம்பவ நிகழ்விடத்திலேயே கதிர்வேல் உயிரிழந்தார்.
Next Story

