ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினர் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பிரியா, உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்
Next Story