பறவைகளை வேட்டையாடிய நபர்கள் கைது

பறவைகளை வேட்டையாடிய நபர்கள் கைது
X
மதுரை மேலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய நபர்களை வன சரக அலுவலர்கள் கைது செய்தனர்.
மதுரை மேலூர் அருகே மருதூரில் அரிய வகை பறவைகள் வேட்டையாடப்படுவதாக கிடைத்த நேற்று தகவலின் பேரில் மதுரை பிரிவு வனச்சரக அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்ட போது நாட்டுத்துப்பாக்கியுடன் பறவைகளை வேட்டையாடிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் திருவாதவூரைச் சேர்ந்த மருதுபாண்டியன் (48), கள்ளந்திரி இளங்கோவன் (60), கொட்டக்குடி செல்லபாண்டி (30) என தெரியவந்தது. அவர்களை கைது செய்து சீழ்கை சிறகி. அரிவாள் மூக்கன், கொக்கு ஆகிய பறவைகளின் உடல்கள், 200 கிராம் துப்பாக்கி குண்டுகள், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story