கோவை சாலைகளில் மாடுகள் – விபத்து அச்சம்!

X
கோவை மாநகரில் முக்கிய சாலைகளில் மாடுகள் சுதந்திரமாக நடமாடுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகரித்து வருகிறது. சமூக ஆர்வலர்கள் இதனைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக சுந்தராபுரம் பகுதியில் உள்ள முக்கிய சாலையில் ஐந்து மாடுகள் அங்கிருந்தபடி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story

