சூளகிரி அருகே பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத்த ஓசூர் எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி சூளகிரி ஊராட்சி ஒன்றியம் பேரண்டப்பள்ளி ஊராட்சியில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஹரிஷ் ஏற்பாட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் ஊராட்சி மன்ற நிதியிலிருந்து சுமார் 2 கோடியே 9 இலட்சம் மதிப்பில் மேல்நிலைப் நீர்த்தேக்க தொட்டி, சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய், பேவர்பிளாக், பைப்லைன் அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் கலந்துக்கொண்டு பூமி பூஜைசெய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் திமுகா நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
Next Story

