கோவை அரசு மருத்துவமனையில் தீபாவளி சிறப்பு தீக்காய சிகிச்சை வார்டு !

X
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பில் ஏற்படக்கூடிய தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை டீன் டாக்டர் கீதாஞ்சலி தெரிவித்ததாவது, தீ விபத்துகள் ஏற்படாமல் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட அரசின் சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத தீக்காயங்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் இந்த சிறப்பு வார்டில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். பிளாஸ்டிக் சர்ஜரி, பொது அறுவை சிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை துறைகளில் இருந்து கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குழந்தைகள் பெற்றோரின் கண்காணிப்பில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
Next Story

