ஓரினச்சேர்க்கைக்கு மறுத்தவரை கொன்றவர் – ஆயுள் தண்டனை கோவை கோர்ட்டு தீர்ப்பு

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்தவரை கொன்றவர் – ஆயுள் தண்டனை கோவை கோர்ட்டு தீர்ப்பு
X
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்தவரை கல்லால் தாக்கி கொன்ற வழக்கில், கோவை நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
மதுரை முன்சாலை பகுதியை சேர்ந்த முகமது பிர்தவ்ஸ் ராஜா (29) மற்றும் 16 வயது சிறுவன் இணைந்து, ரவி என்ற சமையல் தொழிலாளியுடன் மதுகுடித்து வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 14 அன்று வாலாங்குளக் கரையில் மதுகுடித்தபோது, பிர்தவ்ஸ் ராஜா மற்றும் சிறுவன் ரவியிடம் ஓரினச்சேர்க்கைக்காக அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு ரவி மறுத்ததையடுத்து, ஆத்திரமடைந்த இருவரும் கல்லால் தாக்கி அவரை கொன்றனர். இந்த வழக்கில் ரேஸ் கோர்ஸ் போலீசார் பிர்தவ்ஸ் ராஜாவை கைது செய்தனர். வழக்கு விசாரணை நடைபெற்ற கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சசிரேகா, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பிர்தவ்ஸ் ராஜாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனின் வழக்கு சிறுவர் நீதிமன்றத்தில் தனியாக நடைபெற்று வருகிறது.
Next Story