போக்சோ வழக்கில் கைது – குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

X
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் ரவி (வயது 41), லிங்கராஜ் மகன், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், குறித்த நபர் மீதான குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக அமைதிக்கே பாதிப்பு ஏற்படும் வாய்ப்பையும் கருத்தில் கொண்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ரவிக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், ரவி (41) என்பவரை “பாலியல் குற்றவாளி” எனக் கருதி, அவர்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவ்வுத்தரவின்படி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவியின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story

