கோவை: செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட இளைஞர் கைது !

X
கோவை, சூலூர் போலீசார் நடத்திய சோதனையில், பழைய செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய தபன் குமார் சேதி (27) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கோவை சிஐஎஸ் காலனியில் வசித்து வருகிறார். சித்ரா பகுதியில் இருந்து காலப்பட்டி செல்லும் வழியில் அவர் பிடிக்கப்பட்டார். அவர்மீது சூலூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. விசாரணையில், அவர் திருடிய நகைகளை விற்று பணம் பெற்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் அந்த நகைகளை மீட்டுள்ளனர்.
Next Story

