கோவை: கனமழை - மலை ரயில் சேவைகள் ரத்து !

X
நீலகிரியில் நேற்று இரவு கனமழை பெய்ததால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கற்கள், சேறு, மரங்கள் ரயில் பாதையில் விழுந்ததால் கல்ளாறு முதல் குன்னூர் வரை ரயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று (19.10.2025) மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் ரயில் (56136), உதகமண்டலம் – மேட்டுப்பாளையம் ரயில் (56137), மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் சிறப்பு ரயில்(06171) ஆகியவை ரத்து செய்யப்படுவதாகவும், நிலைமை சீராகும் வரை ரயில்கள் இயக்கப்படாது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Next Story

