கோவை: சேரன் மாநகரில் சாலைகள் சீர்குலைவு - மக்கள் வேதனை !

X
சேரன் மாநகர் 22-வது வார்டுக்குட்பட்ட ஜீவா நகர், உதயா நகர், சாவித்திரி நகர் பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக சாலைகள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளன. சமீபத்தில் ட்ரைனேஜ் அமைப்பதற்காக பல இடங்களில் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமல் விட்டுவிடப்பட்டதால், கடந்த வாரம் பெய்த மழையால் அவை சகதியாகி, சாலைகள் வழியாக மக்கள் செல்வது மிகவும் கடினமாகியுள்ளது. சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், பெட்டிஷன்களும் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் இன்று வேதனை தெரிவித்துள்ளனர். உடனடி சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அந்த பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

