கோவை: அரசியலில் வானதி சீனிவாசன் பெண் சிங்கமாக ஜொலிக்கிறார்

கோவை: அரசியலில் வானதி சீனிவாசன் பெண் சிங்கமாக ஜொலிக்கிறார்
X
தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு பட்டாசு, இனிப்பு, புத்தாடை வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்த நடிகை ஆர்த்தி, நானும் மோடியின் மகள் தான் என உருக்கமான பேச்சு.
கோவை டாடாபாத் பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில், மோடியின் மகள் திட்டத்தின் கீழ் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்காக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள், இனிப்புகள், புதிய உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஆர்த்தி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலில் வானதி சீனிவாசன் பெண் சிங்கமாக ஜொலிக்கிறார். மோடியின் மகள் என்ற இந்த திட்டம் குழந்தைகளுக்காக செய்யப்படும் பெருமையான முயற்சி, என தெரிவித்தார். மேலும், தனது தந்தை மூன்று நாட்களுக்கு முன் மறைந்ததாக கூறிய அவர், அப்பா இல்லாத தீபாவளி இதுதான் முதல் முறை. ஆனால் நான் மோடியின் மகள், எனக்கு தாயும் தந்தையுமாக பிரதமர் மோடி இருக்கிறார். பெண்கள் பாதுகாப்பும் தைரியமும் தான் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒளி வீசச் செய்கிறது, என்று உருக்கமாக பேசினார்.
Next Story