கோவை டாடாபாத் பகுதியில் மோடியின் மகள் திட்டம் – தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கல் !

தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் – மோடியின் மகள் திட்டம் மூலம் வானதி சீனிவாசன் வழங்கல்.
கோவை டாடாபாத் பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில் மோடியின் மகள் திட்டத்தின் கீழ் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள், இனிப்புகள், புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்விக்காக ரூ.10,000 உதவியுடன், தீபாவளி பரிசுகளும் வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி கல்விக்கான கட்டண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றார். மேலும், மதுவின் கொடுமையால் தந்தைகளை இழக்கும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. இது நடைபெறக் கூடாது என இறைவனை பிரார்த்தித்து வருகிறேன் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
Next Story