கோவை: மருத்துவமனையில் வாலிபர் கொலை – தகராறில் பரபரப்பு!

கோவை: மருத்துவமனையில் வாலிபர் கொலை – தகராறில் பரபரப்பு!
X
மருத்துவமனை வளாகத்தில் தகராறில் முடிந்த கொலை – விக்னேஷ் கைது.
கடலூரை சேர்ந்த விஜய் (30) என்பவர் திருப்பூரில் பணியாற்றி வந்தார். கர்ப்பிணியான மனைவிக்கு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அதே வார்டில் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவரின் மனைவியும் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை மனதில் கொண்டு வைத்திருந்த விக்னேஷ், நேற்று இரவு மது போதையில் மருத்துவமனை வளாகத்தில் விஜயை அழைத்து சென்று தகராறில் ஈடுபட்டு, கத்திகுத்தால் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார். தப்பி ஓட முயன்ற விக்னேஷை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் விக்னேஷை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story