சர்வர் பழுது: ரேசன் பொருட்கள் பெற முடியாமல் பொதுமக்கள் பாதிப்பு!

X
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மற்றும் பயோமெட்ரிக் முறை வழியாக பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று காலை முதல் சர்வர் கோளாறு காரணமாக ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் மற்றும் கைரேகை பதிவு செய்ய முடியாமல், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவளி முன்னிட்டு அரிசி, சீனி, பாமாயில் போன்ற பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சர்வர் கோளாறை உடனடியாக சரிசெய்து ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

