ஓசூர் அருகே புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் அமீரியா ஜங்ஷன் அருகே நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடு பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் அந்த காரில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் 557 கிலோ மற்றும் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் 48 இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவை கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்டதும், அதை ராஜஸ்தான் மாநி லத்தை சேர்ந்த ஷியாம் சுந்தர் (27) என்பவர் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெங்களூருவை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story

