தமிழ்மலா் சிறப்பு பள்ளி மாணவா்களுக்கு புத்தாடை

தமிழ்மலா் சிறப்பு பள்ளி மாணவா்களுக்கு புத்தாடை
X
சிறப்பு பள்ளி மாணவா்களுக்கு புத்தாடை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனைத் தெருவிலுள்ள தமிழ்மலா் சிறப்பு பள்ளி மாணவா்களுக்கு தீபாவளியையொட்டி புத்தாடை வழங்கப்பட்டது. தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ. புத்தாடை, இனிப்புகளை வழங்கி, மாணவா்களுடன் உரையாடினாா். இந்நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலா் பிரகாஷ், ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பள்ளி நிா்வாகி ஜீவிதா வரவேற்றாா்.
Next Story