மேலூரில் ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

மதுரை மேலூர் ஆட்டுச் சந்தையில் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டையில் வாரா வாரம் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கால்நடை சந்தைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று (அக்.19) சந்தையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பதும் தேவைப்படுவோர் வாங்கி செல்வதமாக இருந்தனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று ஆட்டுச் சந்தையில் 10,000 மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு ஒரு கோடி வரை இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story