கோவை: தீபாவளி தர்மத்தின் வெற்றி – மக்களுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்துகள் !

கோவை: தீபாவளி தர்மத்தின் வெற்றி – மக்களுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்துகள்  !
X
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நன்மையையும் தரும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், உலகெங்கும் வாழும் இந்துக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும் தீபாவளி, தர்மம் (நன்மை) வெற்றி பெறுவதை நினைவூட்டும் பண்டிகை என அவர் கூறினார். அறியாமை, அச்சம் போன்ற இருளை அகற்றி, அறிவும் அமைதியும் பெறும் நாள் தீபாவளி என வானதி சீனிவாசன் குறிப்பிட்டார். அவர், தமிழக அரசியலில் மாற்றம் வரவிருப்பதைச் சுட்டிக்காட்டி, அடுத்த தீபாவளியுடன் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா உலக பொருளாதாரத்தில் முன்னேறி, சுயசார்பு நோக்கத்தை அடைவதே முக்கிய இலக்காக இருக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
Next Story