மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை மேயர், ஆணையர் ஆய்வு

X
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பலத்த மழை பெய்தது தொடர்ந்து தூத்துக்குடி நிகிலேசன் நகர் ராஜீவ்நகர் பிஎன்டி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநகராட்சி மேயர் ஆணையர் ஆய்வு மேற்கொண்டனர்
தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாநகரை ஒட்டி உள்ள பகுதிகளில் நேற்று இரவு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது இதன் காரணமாக மாநகரப் பகுதி மற்றும் மாநகரை ஒட்டி உள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது இந்நிலையில் தூத்துக்குடி மாநகரில் பிஎன்டி காலனி ராஜூவ் நகர் நிகிலேசன் நகர் மற்றும் ஆதிபராசக்தி நகர் முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி சாலைகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது இதைத் தொடர்ந்து அந்த பகுதிகளுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் மின் மோட்டார்கள் மூலமாகவும் மற்ற பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பள்ளங்கள் தோன்டி தாழ்வான பகுதி வழியாக தண்ணீரை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் மாப்பிள்ளையூரனி தட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் மாநகர பகுதிக்குள் உள்ளே நுழையாமல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட தொழில் மையப் பகுதி வடிகால் பகுதியில் இருந்து உப்பாற்று ஓடை வழியாக கடல் பகுதிக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர் இந்த பகுதியிலும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நேற்று இரவு 8 சென்டிமீட்டர் மழை பதிவான நிலையிலும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த காலங்களை ஒப்பிடும்போது தற்போது இரண்டு மணி நேரத்தில் தண்ணீர் வெளியேற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது மேலும் 14 வழித்தடங்கள் மூலம் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து மழை நீர் கடலுக்கு செல்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார் தொடர்ந்து மழை நிலவரம் கண்காணிக்கப்பட்டு பொதுமக்கள் எந்தவித பாதிப்பு அடையாத படி மழை நீரை ஆகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
Next Story

