சேலம் அம்ருத் அறக்கட்டளை- சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்..

X
Rasipuram King 24x7 |20 Oct 2025 9:03 PM ISTசேலம் அம்ருத் அறக்கட்டளை- சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்..
சேலம் அம்ருத் அறக்கட்டளை-தனியார் நிறுவனத்துடன் இணைந்து 7-ம் ஆண்டாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவினை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இதில் ஆர்.செந்தில் ரத்தினம் தலைமை வகித்தார். ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குனரும், நகர்மன்ற முன்னாள் உறுப்பினருமான வி.சுந்தரம், நாவலர் மணி, ரவி ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்சீட், ஹாட் பாக்ஸ், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கி தீபாவளி இனிப்பு போன்றவற்றையும் வழங்கினர். இதனை பெற்று கொண்ட அனைவரும் நன்றி தெரிவித்தனர்...
Next Story
